தில் பஹார்
தேவையான பொருட்கள்
பால்-ஒரு லிட்டர் வே வாட்டர்-ஒரு கப், சர்க்கரை-2 கட் தண்ணீர்-4 கப்
வசய்முறை: பாத்திரத்தில் பால் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். யால் பொங்கியவுடன், ஒரு கப் வே வாட்டரை ஊற்றவும், பால் திரிந்துபோகும். பின்னர் வடிகட்டி, வடிகட்டிய திரிந்தபாலை துணியில் மூட்டைகட்டித் தொங்கவிடவும் பின்னர் தட்டில் கொட்டிப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். ஒவ்வொரு உருண்டையையும் அழகிய இதய வடிவமாக்கவும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து பாகுகாய்ச்சவும். பாகு கொதி வரும் போது, தில்பஹாரை அதனுள் போடவும். இரண்டு மடங்காக உப்பி மேலே மிதந்து வரும்போது எடுத்து கொதிக்க வைத்த வெந்நீரில் போட்டு வைக்கவும். பின்னர் மறுபடியும் அதே பாகைத் தளர காய்ச்சி அதனுள் தில்பஹாரைப் போட்டு ஊறவிடவும்.
பக்குவம்
வெந்நீரில் போட்டால்தான் தில்பஹார் வறண்டு காய்ந்து போகாமல் சாஃப்டாக இருக்கும்.
காசி அல்வா
தேவையான பொருட்கள் துருவிய வெள்ளைப் பூசணித கப், சர்க்கரை ஒரு கட், நெய்க, கோ உஸ்பூன், ஆரஞ்ச் கலர் ஒரு சிட்டிகை, வெள்ளரி விதை: உஸ்பூன்.
செய்முறை பூசணித் துருவலை நன்றாக நீர் வடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் நெய்விட்டு பூசணித் துருவல் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின்னர் சர்க்கரை சேர்க்கவும் அவர் சேர்த்து, திக்காகும் வரை நெய் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும் நெய் சுக்கும் போது கோவா சேர்த்து கிளறி இறக்கி வெள்ளரிவிதைகளைத் தூவவும்,
பக்குவம்
வதங்கின ஈரப்பசையுள்ள பூசணித் துருவலில் சர்க்கரை சேர்த்தாலே சர்க்கரை கரைந்து பதமாகும்.
ட்ரை கலர் முந்திரி
தேவையான பொருட்கள்: முந்திரிப்பருப்பு -ஒரு கப், சர்க்கரை-ஒன்றரைகப், கப், பால்-ஒரு மேஜைக்கரண்டி, நெய்-2 டீஸ்பூன், தண்ணீர்-3/4 தேவையான கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: முந்திரிப் பருப்பை மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சர்க்கரைக் கரைசலை ஊற்றி சூடாக்கி நன்றாகக் கொதிக்க வைக்கவும். அப்போது கொஞ்சம் பால் ஊற்றினால் சர்க்கரையின் அழுக்குகள் ஓரமாக ஒதுங்கி விடும். அதை ஸ்பூனால் எடுத்து விடவும். அடுப்பை சிம்மில் வைத்துக்கொண்டு, கொதிக்கும் சர்க்கரைப் பாகில் முந்திரிப் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக தூவிக் கிளறிக் கொண்டே வரவேண்டும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதம் வரை கிளறி பின் நெய் விட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி அச்சில் ஊற்றவும்.
மிக்ஸியில் முந்திரிப் பருப்பை விட்டு, விட்டு அடித்தால்தான் முந்திரிப் பவுடர் எண்ணெய்ப்பசையின்றி ஃப்ரஷ் பவுடராக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக