பிரிஞ்சால் கொத்சு
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய்-1/4கிலோ, வெங்காயம்-2, ப.மிளகாய் - 4, புளி - எலுமிச்சையளவு, தக்காளி 2.எண்ணெய் 2 மேஜைக்கரண்டி, கடுகு - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காய், வெங்காயம், ப.மிளகாய், தக்காளி இவைகளை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், ப.மிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் கத்தரிக்காயையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் புளியைக் கரைத்து ஊற்றி உப்புப் போட்டு கொதிக்க விடவும். இறக்கியபின் பெருங்காயப்பொடி தூவவும்.
டிப்ஸ் : புளியைக்கடைசியாகச் சேர்த்தால், கொத்சின் சுவை நாவை விட்டகலாது!
டொமேட்டோ மசாலா
தேவையான பொருட்கள்: தக்காளி /கிலோ, வெங்காயம் - 3, மஞ்சள்தூள் - / டீஸ்பூன், மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், சாட்மசாலா1/2 டீஸ்பூன், பட்டை 2,லவங்கம் - 2, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: தக்காளியைத் தண்ணீர் எடுத்து, நடுவில் இருக்கும் பச்சையை நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பிறகு துருவின தக்காளியைப் போட்டு வதக்கவும் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிக் கொண்டிருந்தால் பேஸ்ட் போல வரும். லிக்விட் பதத்தில் வரும்போது இறக்கிவிடலாம்.
டிப்ஸ்: பெங்களூர் தக்காளி பெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக