வடகறி மசாலா
தேவையான பொருட்கள்: சிறிய வடை (மசால்வடை மட்டும்தான்) எனில் - 8, பெரிய வடை எனில் - 4, வெங்காயம் - 2, தக்காளி - 2, கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், தனியாப் பொடி - 1/2 டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்துமல்லித் தழை, உப்பு -தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். பின் கரம் மசாலா தூவி, வடையை உதிர்த்துப் போட்டு கொதிக்கவிட்டு இறக்கி கொத்துமல்லித் தழை தூவவும்.
ஃப்ரூட் டிலைட் மசாலா
தேவையான பொருட்கள்: கிடைத்த அத்தனை பழங்களையும் கட் செய்து 1 கப், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், கரம்மசாலா 1/2 டீஸ்பூன், சாட்மசாலா 1/4 டீஸ்பூன், வெங்காயம் 1,தக்காளி - 1, உப்பு
தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு தேவையான உப்பைப் போடவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு சாட் மசாலா, கரம்மசாலா பொடியோடு பழங்களையும் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
டிப்ஸ்: பழங்களைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக