கடாய் பனீர் மசாலா
தேவையான பொருட்கள்: பனீர் - 1 கிலோ, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சாட்மசாலா /2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 2, தக்காளி - 3, மஞ் சள்தூள் - 1/4 டீஸ்பூன், கரம்மசாலா - ஒரு டீஸ்பூன், சோளமாவு (அ) மைதாமாவு ஒரு கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்ணெயில் பனீரை கட் செய்து வதக்கித் தனியாக வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கவும். மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட்மசாலா, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் வதக்கின பனீரைச் சேர்த்து ஒரு கொதி வந்தபின், சோளமாவு (அ) மைதாமாவை கரைத்து ஊற்றி கலவை திக்கானவுடன் இறக்கி விடவும்.
டிப்ஸ்: பனீரை வெண்ணெயில் வதக்கிப் போட்டால் கிறிஸ்பியாக இருக்கும். உடையாமல் இருக்கும்.
பீட்ரூட் ஸ்பீர் மசாலா
தேவையான பொருட்கள் : பீட்ரூட் - 1/4 கிலோ, மிளகுப்பொடி - ஒரு டீஸ்பூன், தனியாப்பொடி 1/2 டீஸ்பூன், சாட்மசாலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் டேபிள்ஸ்பூன், வெங்காயம் 2, தக்காளி 2 தேங்காய் 4 பத்தை, கசகசா /2 டீஸ்பூன், கரம்மசாலா 1/2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. 2
செய்முறை: பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து, தோல் நீக்கி டைமண்ட் ஷேப்பில் வெட்டி வைத்துக் கொள்ளவும். கசகசாவை வறுத்து தேங்காயுடன் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர்விட்டு பீட்ரூட்டைப் போடவும். உப்பு, மிளகுத்தூள், தனியாத்தூள், சேர்த்து கொதிக்கவிடவும். பீட்ரூட் நன்றாக வெந்தவுடன் தேங்காய் பேஸ்ட், தக்காளி பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் கரம்மசாலா தூவி இறக்கவும்.
டிப்ஸ்: பீட்ரூட் கலர் கிரேவிக்கு அழகு சேர்க்கும். மேலே பச்சைப் பசேலென கொத்துமல்லித்தழை தூவலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக