கோதுமை அப்பம்
தேவையானவை: சம்பா கோதுமை - 200 கிராம்,
ரவை - 2 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 250 கிராம்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப், ஏலக்காய் - 5, நெய் - 100
மில்லி, எண்ணெய் - 200 கிராம், உப்பு - சிட்டிகை.
செய்முறை: சம்பா கோதுமையை 10 மணி நேரம் ஊறவிட்டு, வடித்து, மிக்ஸியில் போடவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். பின்னர் உப்பு, ரவை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், துருவிய வெல்லம் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் நன்றாகக் கலந்து, அரை மணிநேரம் ஊறவைக்கவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். நன்றாக வந்து சிவந்ததும், திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்து எண்ணெயை வடிக்கவும்.
சோயா வெஜ் கைமா
தேவையானகை:
சோயா - 50கிராம். ஆய்ரந்த புதினா - கால் கப் எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10. இஞ்சி, பூண்டு விழுது, பொட்டுக்கடலை மாவு - தலம ஸ்பூன், சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர் (ஆரஞ்சு நிறம்) - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் புதினாவை வதக்கவும். சோயாவை 10 நிமிடம் வேக வைத்து, ஆடு ஆறியதும் கைகளால் உதிர்த்துக் கொள்ளவும், அன்ன வெங்காயத்தை தோலுரித்து மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொட்டுக்கடலை மாவு, சோளமாவு, ஃபுட் கலர், உப்பு, புதினா. எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறவும். உதிர்த்து வைத்துள்ள சோயாவையும் இதில் சேர்த்து பிசைந்து 15 திட்டம் வைக்கவும், பின்னர் சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக