காலிஃப்ளவர் பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு.
செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு.
கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து கடாயில் ஊற்றவும். கொதிவந்ததும் அஜினமோட்டோ தூவி கிளறி இறக்கினால் கிரேவி ரெடி. இந்த கிரேவியில் பொரித்து வைத்த காலிஃப்ளவரைப் போடவும். இதுவே காலிஃப்ளவர் மன்சூரியன். ஏல்ஸ்- வடைகளை உதிர்த்துப்போட்டு அப்படியே சாப்பிடலாம்
மஷ்ரூம் மசாலா
தேவையான பொருட்கள்: பட்டன் மஷ்ரூம் - 200 கிராம், மஞ்சள்தூள் - % டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா தேவையான அளவு. ஒரு டீஸ்பூன், உப்பு
செய்முறை: பட்டன் மஷ்ரூமை சுத்தம் செய்து மேற்கண்ட பொடியுடன் பிசறி ஊற வைக்கவும்.
கிரேவி தயாரிக்க தேவையான பொருட்கள்: வெங்காயம் 3,தக்காளி 2, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாபொடி - ஒரு டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கசகசா ஒரு டீஸ்பூன், தேங்காய் - 4 பத்தை, பட்டை 2, லவங்கம் 2, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 2
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை லவங்கம் தாளிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கூடவே வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்தபின் பிசறி வைத்த மஷ்ரூமை வெண்ணெயில் வதக்கி கடாய் கலவையில் போட்டு கொதிக்கவிடவும். கடைசியாக தேங்காய், கசகசா அரைத்து ஊற்றி கலவை திக்கானவுடன் இறக்கிவிடவும்.
டிப்ஸ்: தண்ணீரை கிரேவிக்கு சிக்கனமாகப்
பயன்படுத்தினால்தான், கிரேவி திக்காக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக