காசி அல்வா
தேவையான பொருட்கள்: துருவிய வெள்ளைப் பூசணி-2 கப், சர்க்கரை ஒரு கப், நெய்+கப், கோவா-2 டீஸ்பூன், ஆரஞ்ச் கலர்-ஒரு சிட்டிகை, வெள்ளரி விதை-2 டீஸ்பூன்.
செய்முறை: பூசணித் துருவலை நன்றாக நீர் வடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் நெய்விட்டு, பூசணித் துருவல் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சர்க்கரை சேர்க்கவும். கலர் சேர்த்து, திக்காகும் வரை நெய் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும். நெய் கக்கும் போது கோவா சேர்த்து கிளறி இறக்கி வெள்ளரிவிதைகளைத் தூவவும்,
வதங்கின ஈரப்பசையுள்ள பூசணித் துருவலில் சர்க்கரை சேர்த்தாலே சர்க்கரை கரைந்து பதமாகும்.
தீல் பஹார்
பத்து நாட்களுக்கு முன்பு திட்டமிட வேண்டிய ஸ்வீட் இது. காரணம், இதற்குத் தேவையான வே வாட்டர்தான். பாலைக் காய்ச்சும் போதே, தயிர் ஒரு துளி விட்டால் பால் திரிந்துவிடும். திரிந்தபின் வடிகட்டி எடுக்கும் தண்ணீர்தான் வே வாட்டர். இந்த வே வாட்டர் பத்துநாள் புளித்தால்தான், தில்பஹார் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: பால்-ஒரு
லிட்டர், வே வாட்டர்-ஒரு கப், சர்க்கரை-2
கப், தண்ணீர்-4 கப்.
செய்முறை: பாத்திரத்தில் பால் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பால் பொங்கியவுடன், ஒரு கப் வே வாட்டரை ஊற்றவும், பால் திரிந்துபோகும். பின்னர் வடிகட்டி, வடிகட்டிய திரிந்தபாலை துணியில் மூட்டைகட்டித் தொங்கவிடவும் பின்னர் தட்டில் கொட்டிப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். ஒவ்வொரு உருண்டையையும் அழகிய இதய வடிவமாக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து பாகுகாய்ச்சவும். பாகு கொதி வரும் போது, தில்பஹாரை அதனுள் போடவும். இரண்டு மடங்காக உப்பி மேலே மிதந்து வரும்போது எடுத்து கொதிக்க வைத்த வெந்நீரில் போட்டு வைக்கவும். பின்னர் மறுபடியும் அதே பாகைத் தளர காய்ச்சி அதனுள் தில்பஹாரைப் போட்டு ஊறவிடவும்.
பக்குவம்
வெந்நீரில் போட்டால்தான் தில்பஹார் வறண்டு காய்ந்து போகாமல் சாஃப்டாக இருக்கும்.
முந்திரி
தண்ணீல்ஒரு போக்கய்ன்பூ தேவையான
முந்திரிமுந்திரிப் பவிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும்ms வேண்டும் சர்க்கரை த்துக் கொள்ளவும் வானவி 12கி நன்றாகக் கொழிக்க வைக்கவும் அப்போது கொஞ்சம் பால் ஊற்றினால் சர்க்கரையின் அழுக்குன் ஓரமாக இதுக்கி விடும். அதனால் எடுத்து விடவும். அடுப்ப வைத்துக்கொண்டு கொதிக்கும் சர்க்கரைப் பாகில் முத்திரி கொஞ்சம் கொஞ்சமாக தூவிக் கிளறிக் கொண்டே வரவேண்டும் ஒட்டாமல் சுருண்டு வரும் பதம் வரை கிளறி பின் தெ ஒரு கிளறு கிளறி இறக்கி ஆச்சில் ஊற்றவும்
விக்ஸியில் முத்திப் பகுப்பை விட்டு வீட்டு அடித்தால்தான் முந்திரி எண்ணெய்ப்பசையிஇருக்கும்
தேன்குழல்
தேவையான பொருட்கள்: தயார் செய்த பச்சரிசி மாவு -3 கப், லேசாக வறுத்து அரைத்த உளுத்தமாவு-3/4கப், வெண்ணெய்-50 கிராம், வெள்ளை எள்-25 கிராம், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு, உப்பு-தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி மாவு, உளுத்தமாவு, எள், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்புசேர்த்து கொஞ்சம் தண்ணீர்விட்டு நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் தேன்குழல் அச்சில் மாவை அடைத்து, எண்ணெயில் பிழியவும். மிதந்துவந்ததும் திருப்பிப்போட்டு எடுத்து விடவும்.
நுரை அடங்கி லேசான சலசலப்பு சப்தம் வந்தாலே தேன்குழல் வெந்துவிட்டது என்று அர்த்தம். தேன்குழல் சிவக்கக் கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக