தேவையானவை:
பச்சரிசி, வேகவைத்த கடலைப்பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 கப், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10. நெய் 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, வெல்லப்பாகு - ஒரு கப், கெட்டியான தேங்காய்ப்பால் கால் கப்.
செய்முறை:
பச்சரிசியை கழுவி 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு சுற்று விடவும். பின்னர் அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வேக விடவும். அரிசிக் கலவை நன்றாக வெந்ததும் வெல்லப்பாகை ஊற்றவும். வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயசத்துடன் கலந்து, வேகவைத்த கடலைப்பருப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக