கார்ன் மிக்ஸர்
தேவையான பொருட்கள்: மக்காச்சோளப்பொரி./கிலோ, சர்க்கரை-ஒரு டீஸ்பூன், திராட்சை-100 கிராம், முந்திரி-100 கிராம், ஓமப்பொடி-2கப், காரப்பொடி-2 டீஸ்பூன், உப்பு-டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: மக்காச்சோளப் பொரியை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும். முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பின் இதோடு மேற்கண்ட மற்றவைகளையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு குலுக்கி, காற்று போகாத டப்பாவில் அடைத்துக் கொள்ளவும்.
மக்காச்சோளப் பொரி எண்ணெயில் போட்டவுடனே பொரிந்துவிடும். உடனே எடுக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் சிவந்துபோய்விடும
ஸ்பெஷல் மிக்ஸர்
தேவையான பொருட்கள்: காராபூந்தி-4 கப், வறுத்த முந்திரிப் பருப்பு-100 கிராம், வறுத்த பொட்டுக்கடலை-100 கிராம். ஓமப்பொடி-4 கப், வறுத்த வேர்க்கடலை-1/4கிலோ, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை (மிளகு (அ) மிளகாய்) காரப்பொடி-2 டீஸ்பூன், வறுத்த அவல்-100 கிராம், பொரித்த கறிவேப்பிலை-2 பிடி, உப்பு-1/4டீஸ்பூன். செய்முறை: வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட அனைத்தையும் கொட்டி, கைபடாமல் பத்திரப்படுத்தவும். குலுக்கி காற்றுப்புகாத டப்பாவில் அடைக்கவும்
மிளகுப்பொடி அல்லது மிளகாய்ப்பொடி போடுவதால் லேசாக உப்பு போட வேண்டும்
. முள்ளு முறுக்கு
தேவையான பொருட்கள்: கடலைமாவு-2 கப், பச்சரிசி மாவு-ஒரு கப், மிளகாய்ப்பொடி-ஒரு டீஸ்பூன், வெண்ணெய்-50 கிராம், பெருங்காயம் ஒரு சிட்டிகை, எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடலைமாவு, பச்சரிசிமாவு, மிளகாய்ப்பொடி, வெண்ணெய், பெருங்காயம், உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட் காய்ந்ததும் மகிழம்பூ அச்சில் பிழியவும். எண்ணெய் மாவை அடைத்து, எண்ணெயில்
பக்குவம்
மாவைப் பிசைந்த உடனே முள்ளுமுறுக்கு சுட்டுவிட வேண்டும். கடலைமாவு கலந்திருப்பதால், முறுக்கு உடனே சிவந்து விடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக