சோயா சங்க் புலாவ்
தேவையானவை: சோயா சங்க்-1 கப், தயிர்-1/4 கப்,
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள்-1 டீஸ்பூன், சால்ட்-1/4 டீஸ்பூன், பாசுமதி அரிசி-1 கப், எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன், நெய்-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1 (நறுக்கியது), பட்டை-1, கிராம்பு-2, சீரகம்-1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை, தக்காளி-1 ப.மிளகாய்-2, இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன், கரம் மசாலா-1 டீஸ்பூன்.
செய்முறை: சோயாவை 15 நிமிடம் கொதிநீரில் ஊறவிட்டு பிழிந்து எடுக்கவும். அதில் தயிர் 1/4 கப், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து பிசறி 20 நிமிடம் ஊறவிடவும்.
பிரஷர் பேனில் எண்ணெய், நெய் விட்டு மசாலா சாமான், சீரகம், வெங்காயம் வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது பிசறி வைத்த சோயாவை சேர்த்து கிளறி பின் 20 நிமிடம் ஊறவைத்த பாசுமதி அரிசியைச் சேர்க்கவும். 1 1/2 கப் நீர் விட்டு 2 விசில் வரும் வரை வேகவிடவும். மல்லி இலை தூவவும்.சோயா சங்க் புலாவ் ரெடி.
உருளைக் கிழங்கு சாதம்
தேவையானவை: கடுகு-1 டீஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன்,
சோம்பு-1 டீஸ்பூன், கிராம்பு-2, ஏலம்-2, பிரிஞ்சி இலை-1, உருளைக் கிழங்கு-2 (மீடியம் சைஸ்), பொன்னி அரிசி-1 கப், மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள்-1 டீஸ்பூன், கரம் மசாலா-1/2 டீஸ்பூன், மல்லி இலை, உப்பு, எண்ணெய், தண்ணீர், வெங்காயம்.
செய்முறை: அரிசியை நன்கு கழுவி உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், சோம்பு மசாலா சாமான் சேர்த்து வெங்காயம் (நறுக்கிய) சேர்க்கவும். சிறிது வதங்கிய பிறகு கியூபாக நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். நன்கு வெந்தபிறகு மசாலா பவுடர் சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கிய பிறகு வடித்த சாதம் சேர்த்து கிளறவும். உருளைக் கிழங்கு சாதம் ரெடி.
கேபேஜ் புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி-1 கப், தண்ணீர் 1 1/2 கப், பட்டாணி-1/2 கப், கேரட்-1. மஞ்சள்தூள் 1 டீஸ்பூன், நெய்-2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய கோஸ்-2 கப், தண்ணீர், உப்பு, மல்லி இலை, சீரகம்-1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-2, ஏலம்-2, மிளகு-1 டீஸ்பூன், கிராம்பு 23, கோஸ் நீர் விடும் என்பதால் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் நீர் போதும்.
செய்முறை: பிரஷர் பேனில் நெய், எண்ணெய் விட்டு மசாலா சாமான் வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய கேரட் வதக்கவும். கழுவி ஊறவைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்த்து, கோஸ் சேர்த்து வதக்கிய பிறகு (1 நிமிடம்) தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவிடவும் .கேபேஜ் புலாவ் ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக