சாம்பார் சாதம்
தேவையானவை: ப.அரிசி, துவரம்பருப்பு, பீன்ஸ், கேரட், சாம்பார் வெங்காயம், முருங்கைக்காய், பச்சை பட்டாணி, சாம்பார் பொடி, உப்பு, எண்ணெய், நெய், முந்திரி, கறிவேப்பிலை, புளி, கடுகு.
செய்முறை: அரிசி-1 கப், பருப்பு 1/2 கப். குக்கரில் வேக விடவும் (தனித்தனியாக)
புளி கரைத்து காய்களை வதக்கி சாம்பார் செய்யவும். பிறகு வெந்த சாதத்தில் சாம்பார் ஊற்றி நன்கு கிளறி, சிறிது நேரம் அடுப்பில் கொதிக்க விடவும். அல்லது ரைஸ் குக்கரில் வைக்கலாம். நெய்யில் கடுகு, முந்திரி தாளிக்கவும். சாம்பார் செய்வதற்கு சாம்பார் பொடி தயாரித்து போட்டால், சுவை கூடுதலாக இருக்கும்.
சாம்பார் பொடி: காய்ந்த மிளகாய்-7 (அ) 8, தனியா-1 டேபிள் ஸ்பூன், மிளகு-1/2 டீஸ்பூன், சீரகம்-1/2 டீஸ்பூன், க.பருப்பு-1 டேபிள் ஸ்பூன், வெந்தயம்-1/4 டீஸ்பூன், பெருங்காயம், எண்ணெய்யில் வதக்கிப் பொடி செய்து போடவும்.
இதற்கு பொரியல், சிப்ஸ், வடாம் நன்றாக இருக்கும்.
வெந்தய புலாவ்
தேவையானவை: தண்ணீர்-1 கப், வெந்தயக்கீரை-பெரிய கட்டு 1, பாசுமதி அரிசி-1/2 கப், நெய், பனீர், சீரகம்-1/2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-1, மிளகு, பட்டை-சிறிது, கிராம்பு-2 (அ) 3, அன்னாசிமொக்கு-1, வெங்காயம்-1, பச்சை மிளகாய்-1, மஞ்சள்தூள், மிளகாய்ப் பொடி தேவையான. அளவு.
செய்முறை: பிரஷர் பேனில் நெய் விட்டு மொக்கு, கிராம்பு, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயக்கீரை, பாசுமதி அரிசி, மஞ்சள்தூள், சிகப்பு மிளகாய் தூள், உப்பு போட்டு நீர் ஊற்றி 3 விசில் வரும்வரை வேக விடவும். வெந்த பிறகு பனீர் (வதக்கிய) சேர்க்கவும்.
பூந்தி, தயிர்ப் பச்சடி நன்றாக இருக்கும்.
வெஜிடபுள் புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி, தண்ணீர், உப்பு, நெய், கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், மஞ்சள்தூள், சிகப்பு மிளகாய்த் தூள், பிரியாணி மசாலாத் தூள், பட்டை, கிராம்பு-2, ஏலக்காய்-2, பிரிஞ்சி இலை-2, மராட்டி மொக்கு-2, அன்னாசி மொக்கு-2, புதினா, கொத்தமல்லி இலை, நெய், உப்பு தேவையான அளவு. இஞ்சி, பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன், அரிசி-1 கப், தண்ணீர்-2 கப். காய்கறிகள் வேக-1/4 கப்
செய்முறை: பிரஷர் பேனில் நெய், எண்ணெய் விட்டு மசாலா சாமான் போடவும். பிறகு ஒரே மாதிரியாக நறுக்கியக் காய்கறிகளைச் சேர்க்கவும். 20 நிமிடம் ஊறவைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், பிரியாணி மசாலாத் தூள், புதினா, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் வரும்வரை வைத்து இறக்கவும். கொத்தமல்லி நறுக்கி சேர்க்கவும். புலாவ் ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக