உருளைக்கிழங்கு வறுவல் &நேந்திரங்காய் வறுவல்&சேனை வறுவல்&சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்&மரவள்ளிக்கிழங்கு வறுவல்
உருளைக்கிழங்கு வறுவல்
தேவையானவை: பெரிய சைஸ் உருளைக்கிழங்கு எண்ணெய் - 250 மில்லி, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை உரித்து, வறுவல் கட்டையில் வட்ட வடிவத் துண்டுகளாக சீவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நன்றாக சூடேற்றி, சீவிய உருளைத் துண்டுகளை பரவலாக போட்டு, மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் அடைக்கவும்.
நேந்திரங்காய் வறுவல்
தேவையானவை: நேந்திரங்காய் - 2, எண்ணெய் மில்லி, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 250
செய்முறை: நேந்திரங்காயின் தோலை உரித்து, வறுவல் சீவும் கட்டையில் சீவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக சூடானதும், நறுக்கி வைத்துள்ள நேந்திரங்காய்த் துண்டுகளை போட்டு, ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதவாறு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் ஸ்டோர் செய்து வைக்கவும்.
சேனை வறுவல்
தேவையானவை: சேனை - 250 கிராம், எண்ணெய் மில்லி, மிளகாய்த்தூள் உப்பு - தேவையான அளவு. 250 ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு,
செய்முறை: சேனையை தோல் சீவி, வறுவல் சீவும் கட்டையில் சிறிய துண்டுகளாக சீவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீவி வைத்துள்ள சேனைத் துண்டுகளைப் போட்டு, நன்கு கிளறிவிட்டு, மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்&
தேவையானவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 250 கிராம் எண்ணெய் - 250 மில்லி, பிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை: க்கரைவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி வறுவல் கட்டையில் வைத்து வில்லைகளாக சிக் கொள்ளவும். வாணலியில் எண்கொய்யை காய வைத்துவைத்துள்ள துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். பின்னர் உட்பு விளகாய்த்தூன் சேர்த்து காற்றுப்புகாத டப்பாவில் மூடவும்.
மரவள்ளிக்கிழங்கு வறுவல்
தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு 250 கிராம், எண்ணெய் - 250 மில்லி, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோல் உரித்து, வறுவல் சீவும் கட்டையில் சீவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், சீவிய துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் அடைக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக