குதிரைவாலி - வெஜ் சூப்
தேவையானவை: குதிரைவாலி, வேகவைத்து அரைத்த தக்காளி விழுது - தலா கால் கப், பொடியாக நறுக்கிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், பீன்ஸ் தலா கால் கப், பச்சைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலியை நன்றாகக் கழுவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகள், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். பின்னர் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள குதிரைவாலி கலவையைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைத்து இறக்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். சூப் மிகவும் கெட்டியாக இருந்தால், சூடு தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கலந்து பரிமாறவும்.
நாட்டு காய்கறி சூப்
அரை தேவையானவை: மஞ்சள் பூசணித் துண்டுகள் கப், வெள்ளைப் பூசணித் துண்டுகள், சுரைக்காய் துண்டுகள், பீர்க்கங்காய் துண்டுகள் - தலா கால் கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பூண்டு 2 பல், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகுத்தூள், சீரகம் தலா ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய், எலுமிச்சைச்சாறு நறுக்கிய கொத்துமல்லித்தழை - கால் கப், உப்பு - தேவையான அளவு. தலா 2 ஸ்பூன், பொடியாக
செய்முறை: காய்கறிகளுடன் மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவைத்து, ஆற வைத்து அரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் வடிகட்டிய காய்கறிச்சாறு, தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். சூப் நன்றாக பொங்கியதும் இறக்கி, எலுமிச்சைச்சாறை விட்டு, கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக