வல்லாரை சூப்
தேவையானவை: வல்லாரை இலை
வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு தலா ஒன்று, பூண்டு - 2 கப், பல், பால் - 2 கப், பட்டை - சிறிய துண்டு, எண்ணெய் ஒரு ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் வல்லாரை இலை சேர்த்து லேசாக வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இந்த விழுதை அடுப்பில் வைத்து, அதனுடன் பால், நன்கு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
மிளகு ரசம்
தேவையானவை: மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சீரகம், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிளகு, சீரகத்தை பொடித்துக் கொள்ளவும். புளியைக்
கரைத்து அடுப்பில் வைக்கவும். பின்னர் உப்பு போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு, மிளகு-சீரக பொடியை வறுத்து ரசத்தில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் பெருங்காயத்தூளை சேர்த்து கடுகை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக