தேவையானனை பனீர் - 200 கிராம், வெங்காயம் - 2, தக்காளி, பச்சைமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - அரை இன்ச், நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன், மஞ்சள்தூன் கால் டீஸ்பூன் கரம் மசாலா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஒருஅர்பூன், தோசை மாவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பனீரை சுடு தண்ணீரில் போட்டு மிருதுவாக்கி, உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், துருவிய இஞ்சி,
கீறிய பச்சையிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பானதும், பனீர் மசாலாவை தோசையின் நடுவில் வைத்து, மூடி இறக்கி, சூடாக பரிமாறவும்.
குறிப்பு: இந்த தோசைக்கு தேங்காய்ச் சட்னி ஏற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக