தேவையானவை: பாஸ்மதி அரிசி, தக்காளி ஜூஸ், உதிர்த்த புரோக்கோலி துண்டுகள் தலா ஒரு கப், கெட்டித்தயிர் அரை கப், பீட்ரூட் துருவல் - கால் கப், வெங்காயம் 2, கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், நெய் சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, வதக்கிய பூண்டு 4 பல், தனியா - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, அடுப்புத் தணலில் நேரடியாக சுட்ட பெரிய வெங்காயம் - ஒன்று, தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி அரை அங்குலத் துண்டு. இவற்றை விழுதாக அரைக்கவும்.
புரோக்கோலி - பீட்ரூட் புலாவ் செய்முறை: அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து நீரை வடிக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ஊறவைத்த அரிசியை போட்டு| 3 நிமிடம் வறுத்து தனியாக வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பீட்ரூட் சேர்த்து வதக்கி, புரோக்கோலி துண்டுகள், உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, தக்காளி ஜூஸ், உப்பு, கரம் மசாலா, கெட்டித் தயிர் சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் வறுத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். சூடாக இருக்கும்போதே மேலாக சிறிதளவு நெய் ஊற்றி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக