எல்லோ ரைஸ்
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கப், துவரம் பருப்பு - அரை கப், தேங்காய்த்துருவல் கால் கப், பூண்டு 4 பல், காய்ந்த மிளகாய் 6. சீரகம் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு-தேவையான அளவு. தாளிக்க: கடுகு -ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், கருவடகம் 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் அலசி குக்கரில் போடவும் அதனுடன் மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு, 4 டம்ளர் தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்னர் அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைத்திருந்து இறக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கருவடகம், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, அரிசி-பருப்பு சாதம், தேங்காய்த்துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக