முருங்கைக்காய் கூட்டுச் சாறு
முருங்கைக்காய் - 2, கடுகு - 1 டீஸ்பூன், கருவடகம் - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் 1 கப், புளிக்கரைசல் தேவையான அளவு. வறுத்து அரைக்க: சாம்பார் வெங்காயம் 1 கீப், தனியா 2 டீஸ்பூன், துவரம் பருப்பு, எண்ணெய் தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை சிறியதாக நறுக்கி, புளிக்கரைசல், மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பின்னர் அரைத்த விழுது, 3 கப் அளவு தண்ணீர், தேவை யான அளவு, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவடகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொட்டவும். வெங்காயத்தை தனியாக வதக்கி சேர்த்து இறக்கி, சூடான சாதம் (அ) தயிர் சாதத்துடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக