கீரை மசாலா
தேவையான பொருட்கள்: எந்த கீரையாவது மூன்று வகைக் கீரைகள் - 3 கைப்பிடி அளவு, ப.மிளகாய் 4.வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பட்டை 2,லவங்கம் - 2, மிளகாய்த்தூள் */ டீஸ்பூன், மஞ்சள்தூள் / டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - / மூடி, எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, கடுகு - ஒரு டீஸ்பூன், குழம்பு தாளிக்கும் வடகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரைகளைப் பறித்து சுத்தம்செய்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சமே கொஞ்சம் கீரையை மட்டும் எடுத்து பொரித்து வைத்துக்கொள்ளவும். பிறகு கடுகு கறிவேப்பிலை, பட்டை, லவங்கம் தாளித்து தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின்னர் கீரையையும் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு வேகவிடவும். கொதிவந்தபின் இறக்கி பொரித்து வைத்த கீரையை மேலே
தூவவும். பப்ஸ்: வெறும் முருங்கைக்கீரையை மட்டும் பொரித்து மேலே தூவினாலும், சாப்பிட ஜோர்தான்!
வெஜிடபுள் கிரேவி
தேவையான பொருட்கள்: கேரட், குடைமிளகாய், முட்டைக் கோஸ், பீட்ரூட், வெங்காயத்தூள் அனைத்தும் (பொடியாக நறுக்கியது) ஒரு கப், வெங்காயம் 2, மிளகுப்பொடி - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு டீஸ்பூன், சோளமாவு 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்களைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் போட்டு உருகியவுடன் வெங்காயத்தை வதக்கி பின் காய்கறிகளை கலர் மாறாமல் வதக்கவும். உப்பு, அஜினமோட்டோ, மிளகுப்பொடி போட்டுக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவந்தவுடன் சோளமாவைத் திக்காக கரைத்து ஊற்றிக் கிளறவும். கிரேவி திக்கானவுடன் இறக்கிவிடவும்.
டிப்ஸ்: சோனமாவுக்குப் பதில் கடலை மாவு சேர்த்தாலும் சுவை மாறாமல் இருக்கும்! .
கருத்துகள்
கருத்துரையிடுக