காலிஃபிளவர் சூப்
தேவையானவை: மட்டன் 50 கிராம், சின்ன வெங்காயம் 5, தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகு, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு. கறிவேப்பிலை. உப்பு -தேவையான அளவு.
செய்முறை: தனியாதூள், மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த காலிஃபிளவர் சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கவும். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து, இஞ்சியை தட்டிப் போட்டு, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் 1 டீஸ்பூன் கான்ஃப்ளர் மாவு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.
பாலக் - வெஜ் சூப்
தேவையானவை: பாலக்கீரை, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளான் (அனைத்தும் மெல்லிதாக, நீளவாக்கில் நறுக்கியது) - தலா அரை கப், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், கறுப்பு உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய காளான், இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் சேர்த்து லேசாக வதக்கி, நறுக்கிய பாலக்கீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் நன்றாக கொதிக்கவிட்டு, கறுப்பு உப்பு, மிளகுத்தூள் கலந்து, அடுப்பில் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக