நவரத்ன மசாலா
தேவையான பொருட்கள்: கிடைக்கும் எல்லாக் காய்களும் பொடியாக நறுக்கியது - ஒரு கப், மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, தக்காளி - 2, தேங்காய் - 4 பத்தை, உடைச்சகடலை - ஒரு டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா - ஒரு டீஸ்பூன், பட்டை 2.லவங்கம் 2, மராத்தி மொக்கு - 2, உப்பு - தேவையான அளவு. -
செய்முறை: பட்டை, லவங்கம், மராத்தி மொக்கு மூன்றையும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய், உடைச்சகடலை, கசகசாவை அரைத்து பேஸ்ட் போல் வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் காய்களையும் சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு பேனில் திறந்தபடி வேக வைக்கவும். ஒரு கொதி வந்தபின் தேங்காய் பேஸ்டை கலந்து, ஒரு கொதிவந்தபின் நுணுக்கிய பவுடரை சேர்த்துக் கிளறி இறக்கிவிடவும்.
டிப்ஸ் : நுணுக்கிய பவுடர் கடைசியில் சேர்த்தால் வாசனையே
ஆனியன் கிரேவி
தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் - 1/2 கிலோ, மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், புளித்தண்ணீர் - ஒரு கப், வெல்லத்தண்ணீர் (கரைத்த வெல்லம்) ஒரு கப், எலுமிச்சம்பழம் 1/2 மூடி, கறிவேப்பிலை, உப்பு தேவையானஅளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும். சாம்பார் வெங்காயத்தை உறித்து முழுதாகப் போட்டு நன்கு வதக்கவும் (ப்ரவுன் நிறம் வேண்டாம்). புளித்தண்ணீர், வெல்லத் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து வெங்காயத்தை வேகவிடவும். ஒரு கொதி வந்தபின் இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும்.
டிப்ஸ் : சாம்பார் வெங்காயம் முழுதாகப் போட்டால்தான் பார்க்க அழகு, சாப்பிட ருசி!
கருத்துகள்
கருத்துரையிடுக