வெடிக்க விட்ட மோர்க்குழம்பு
தேவையானவை அளித்த மோர் (கெட்டியாக இருக்க வேண்டும்) - ஒரு கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்- 4. வெந்தயம் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு பெருங்காயம், கறிவேப்பிலை,
கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மோருடன் அரிசி மாவு, உப்பு சேர்த்து கரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு. கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் கரைத்த மோரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவவும். இந்த குழம்பை அடை (அ) கோதுமை தோசையுடன் பரிமாறலாம் தேவையானவை:
வெண்டைக்காய் 10, சோளமாவு,
அரிசி மாவு, மைதா மாவு தலா 2 டேபிள்ஸ்பூன், வறுத்த வேர்க் கடலைத்துண்டுகள் 1 டேபிள்ஸ்பூன், புளிக் கரைசல் கால் கப், கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
வெண்டை பக்கோடா
செய்முறை:
வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் வெண்டைக்காயை போட்டு. சில நிமிடம் வேக விடவும். பின்னர் நீரை வடித்து, மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு பிசறி, சூடான எண்ணையில் கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக