சோயா கோஃப்தா கிரேவி
தேவையான பொருட்கள்: சோயா மாவு - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு */ கப், வெங்காயம் ஒன்று, கடுகு ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்
ஒரு சிட்டிகை, எண்ணெய் டேபிள் ஸ்பூன், தண்ணீர் டம்ளர், கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு. 2 2
செய்முறை: தண்ணீரை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்த பின் கடாயில் எண் ணயை ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின வெங்காயத்தை வதக்கி, மூன்று மாவுகள், பெருங்காயம் சேர்த்து வதக்கிய பின், வதக்கின மாவுக் கலவையை கொதிக்கும் தண்ணீரில் கொட்டிக் கிளறவும். மாவு கெட்டியானதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கிரேவி தயாரிக்க: வெங்காயம் ஒன்று. தக்காளி 2, பட்டை - லவங்கம் 2, மாங்காய்ப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், - மிளகுப் பொடி ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ மாவு அளவு. - 2, ஒரு டீஸ்பூன், சோள 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான
செய்முறை: வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம் விழுதை வதக்கவும். மாங்காய்ப்பொடி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, மிளகாய்த்தூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்துக் கிளறி தக்காளி விழுதைச் சேர்க்கவும். சோளமாவைத் தண்ணீரில் கரைத்து கலவையில் ஊற்றிக் கிளறவும். கிரேவி திக்கானதும், வேக வைத்த உருண்டைகளைப் போட்டு இறக்கவும்.
பயறு மசாலா
தேவையான பொருட்கள் : முளை கட்டின பயறு வகைகள்-ஒரு கப், வெங்காயம்-2, தக்காளி-2, இஞ்சிபூண்டு விழுது-ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், தனியாப்பொடி- 1/2 டீஸ்பூன், புளி- எலுமிச்சையளவு, பட்டை-2, லவங்கம்-2, உப்பு, கறிவேப்பிலை-தேவையான அளவு, தேங்காய்-4 பத்தை.
செய்முறை: பயறுகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கத்தை நுணுக்கிப் போடவும் வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின்னர் வேக வைத்த பயறுகளைச் சேர்த்து, இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்த பின் புளித்தண்ணீர் ஊற்றவும். கடைசியாக தேங்காய் பத்தை அரைச்சு ஊற்றி கொதி வந்தபின் இறக்கிவிடவும்.
டிப்ஸ்: கிரேவிக்கு உடைச்சகடலை அரைத்து ஊற்றலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக