இலந்தை வடாம் பச்சடி
தேவையானவை: இலந்தை வடாம் - 10, வெல்லம் - சிறிய துண்டு, எண்ணெய், கடுகு - சிறிதளவு.
செய்முறை: இலந்தை வடாமை தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும் இலந்தைப் பழத்திலும். இதே முறையில் பச்சடி செய்யலாம்.
பொங்கல் (அ) அரிசி உப்புமாவுடன் தொட்டுக்கொள்ள ஏற்ற சைட்-டிஷ்
தேங்காய்-வெல்லப் பால்
தேங்காய் - 1, பொடித்த வெல்லம், பால் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்.
செய்முறை:
தேங்காயைத் துருவி பாலெடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். அகலமான பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி ஆறவைக்கவும். தேங்காய்ப்பாலுடன், ஏலக்காய்த்தூள், வெல்லக்கரைசல், காய்ச்சி ஆற வைத்த பால்
சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த இனிப்புப் பாலை ஆப்பத்துடன் சேர்த்து
சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக