தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், அரிசி மாவு, வெள்ளை ரவை - தலா கால் கப், தயிர் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், பச்சைமிளகாய் - ஒன்று, உப்பு - தேவைக்கு.
செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் போட்டு வரும் வரை நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கவும். அகலமான பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, வெள்ளை ரவை, சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்துமல்லித்தழை, உப்பு, தயிர் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு 'ரவா தோசை பதத்திற்கு கரைக்கவும். இந்த மாவை சூடான தோசைக்கல்லில் ரவா தோசையைப் போல ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, தோசைக்கல்லை மூடி வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வெந்ததும் எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக