தேவையானவை:
தோசை மாவு ஒரு கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
தோசையின் மீது தாவா.நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் தலா 2 டீஸ்பூன், பனீர் 10 சிறிய துண்டுகள், ஆரகேனோ - அரை டீஸ்பூன், சீஸ் - 5 டீஸ்பூன், சில்லி ஃபிளேக்ஸ் - கால் டீஸ்பூன்.
செய்முறை: ஸ்வீட் கார்னை குக்கரில் போட்டு, தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பங்களாக ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், பனீர் ஆகியவற்றை தூவி, தோசையை சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விடவும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும், துருவிய சீஸை சிறிதளவு சேர்க்கவும். சீஸ் உருகும்போது, ஆரகேனோ, சில்லி ஃபிளேக்ஸ் தூவி, தோசையை கல்லில் இருந்து எடுக்கவும். பின்னர் இந்த தோசையை பீட்ஸாவை போல, கத்தியாலோ (அ) பீட்ஸா கட்டராலோ வெட்டி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக