வெஜ் சால்னா
உங்களுக்கு விருப்பமான காய்கள் -1 கப், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா அரை கப், இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தலா-2.
சால்னாவிற்கு: வெங்காயம் அரை கப், தக்காளி - கால் கப், மாங்காய் - 1, கத்தரிக்காய் 2, கறிவேப்பிலை சிறிதளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா 1 டேபிள்ஸ்பூன், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வேகவைக்க கொடுத்துள்ளவற்றை நன்றாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காய வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும் மாங்காய், கத்தரிக்காயை சேர்த்:து மைய வேகவிடவும். பின்னர் வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக