தேவையானவை:
சதுரமாக நறுக்கிய பனீர் துண்டுகள் - 10, வெண்ணெய், - வதக்க தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. அரைக்க: முந்திரி 10, கசகசா - 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம், பட்டை, ஏலக்காய் - தலா 1, தக்காளி, கிராம்பு - தலா 3, தனியா 1 ஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை
கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் - தலா 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு 5 பல், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, உருகியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் இதில் பொரித்த பனீரை சேர்த்து வதக்கி பாத்திரத்தை மூடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து சில நிமிடம் வேகவிடவும். (அடி பிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறி விடவும்.) பனீரும் மசாலாவும் நன்றாக மிக்ஸ் ஆனதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக