தேவையானவை:
விருப்பமான காய்கறி கலவை பொடியாக நறுக்கியது) - ஒன்றரை கப், தேங்காய்ப்பால் - 2 கப், சர்க்கரை, சோம்பு - தலா அரை டீஸ்பூன். அரைக்க: பொட்டுக்கடலை, கசகசா - தலா 1 ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 5, பட்டை
சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு தலா 2, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா மூன்றையும் ஒன்றாக சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு, தேங்காய்ப்பால், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, இஞ்சி, ப.மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, அரைத்த பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் மிக்ஸட் வெஜ் கலவையை ஊற்றி ஒரு கொதிவிடவும். இறக்கும் போது சர்க்கரை சேர்த்து கலந்து இறக்கவும்.மேலும் WWW.kalaireal.xyz என்ற தளத்தில் பார்க்களாம்
கருத்துகள்
கருத்துரையிடுக