கேரட். பட்டானி . உருளை 1 கப் .வெங்காயம் அரை கப், தக்காளி கால் கப், பச்சைமிளகாய் - 5, தனியாத் தூள், இஞ்சி, பூண்டு விழுது தலா ஒரு டீஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: ஊறவைத்த கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் அரை கப், பொட்டுக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி - 10.
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, கேரட். பட்டானி . உருளை 1 கப் சேர்த்து, ஐந்து நிமிடம் வதக்கவும். பின்னர் பச்சைமிளகாய், தக்காளி, தயிர் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். பின் அரைத்த விழுது, உப்பு, தனியாத்தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின்னர் எலுமிச்சைச்சாறு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து குருமாவின் மேல் எண்ணெய் பிரிந்து வந்ததும், மல்லித்தழைத் தூவி இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக