முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

சேப்பங்கிழங்கு ஸ்பைசி

 சேப்பங்கிழங்கு ஸ்பைசி  குக்கரில் ஒரு கப் தண்ணீர் விட்டு சேப்பங்கிழங்கு உப்பு சேர்த்து ஒரு விரிவிட்யும் பின்னர் தோலை உரித்துக் கொள்ளவும். பின்னர் பியகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மெல், மஞ்சள்தூள், சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து. சிறிய உருண்டை உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய்வைத்துசேப்பங்கிழங்கு, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பக்கோடா குழம்பு

 வெங்காய பக்கோடா 100 கிரகம் நெல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள்," கரம்மசாலாத்தூள் கெட்டி புளிக்கரைசல் - 1 கப், நறுக்கிய புதினா - கால் கப், வெங்காயம், தக்காளி - தன 2. இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு எண்ணெய் - தேவையான அளவு, செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய், நெய் விட்டு காயந்ததும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா சேர்த்து வதக்கவும், பிள்ளர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் கரம்மசாலாத்தூள். மிளகாய்த்தூள் சேர்த்து மறுபடியும் கொதிவிடவும். குழம்பு கண்டி வரும்போது, வெங்காய் பக்கோடாவை சேர்த்து கிளறி இறக்கவும். 

பனீர் மக்கன்

 தேவையானவை: சதுரமாக நறுக்கிய பனீர் துண்டுகள் - 10, வெண்ணெய், - வதக்க தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. அரைக்க: முந்திரி 10, கசகசா - 1 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம், பட்டை, ஏலக்காய் - தலா 1, தக்காளி, கிராம்பு - தலா 3, தனியா 1 ஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை  கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் - தலா 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு 5 பல், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, உருகியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் இதில் பொரித்த பனீரை சேர்த்து வதக்கி பாத்திரத்தை மூடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து சில நிமிடம் வேகவிடவும். (அடி பிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறி விடவும்.) பனீரும் மசாலாவும் நன்றாக மிக்ஸ் ஆனதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

கோகனட் மில்க் மசாலா

 தேவையானவை: விருப்பமான காய்கறி கலவை பொடியாக நறுக்கியது) - ஒன்றரை கப், தேங்காய்ப்பால் - 2 கப், சர்க்கரை, சோம்பு - தலா அரை டீஸ்பூன். அரைக்க: பொட்டுக்கடலை, கசகசா - தலா 1 ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 5, பட்டை சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு தலா 2, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா மூன்றையும் ஒன்றாக சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு, தேங்காய்ப்பால், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, இஞ்சி, ப.மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, அரைத்த பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் மிக்ஸட் வெஜ் கலவையை ஊற்றி ஒரு கொதிவிடவும். இறக்கும் போது சர்க்கரை சேர்த்து கலந்து இறக்கவும்.மேலு‌ம் WWW.kalaireal.xyz என்ற தளத்தில்   பார்க்களாம்

கத்தரிக்காய் கிரேவி

தேவையானவை:  கத்தரி - கிரேவி  சின்ன சைஸ் கத்தரிக்காய் - 5. தக்காளி - 1, வெங்காயம் - 2, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீர்பூன்,தனியாத்தூள் - தலா 2 டீஸ்பூன், தயிர் புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தக்காளி  4. டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4  செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் தூள் வகைகளைச் சேர்த்து வதக்கவும், அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும், பின்னர் , தயிர், மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும், வெந்ததும் கத்தரிக்காயைச் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை சுருள வேகவிட்டு இறக்கவும். விரும்பினால் கடைசியாக சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.

வெஜ் சால்னா

     வெஜ் சால்னா உங்களுக்கு விருப்பமான காய்கள் -1 கப், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா அரை கப், இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தலா-2.  சால்னாவிற்கு: வெங்காயம் அரை கப், தக்காளி - கால் கப், மாங்காய் - 1, கத்தரிக்காய் 2, கறிவேப்பிலை சிறிதளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா 1 டேபிள்ஸ்பூன், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  செய்முறை:  வேகவைக்க கொடுத்துள்ளவற்றை நன்றாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காய வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும் மாங்காய், கத்தரிக்காயை சேர்த்:து மைய வேகவிடவும். பின்னர் வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

ஓய்ட் குருமா

 கேரட். பட்டானி . உருளை 1 கப் .வெங்காயம் அரை கப், தக்காளி கால் கப், பச்சைமிளகாய் - 5, தனியாத் தூள், இஞ்சி, பூண்டு விழுது தலா ஒரு டீஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.     அரைக்க: ஊறவைத்த கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் அரை கப், பொட்டுக்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி - 10.     செய்முறை:     அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, கேரட். பட்டானி . உருளை 1 கப் சேர்த்து, ஐந்து நிமிடம் வதக்கவும். பின்னர் பச்சைமிளகாய், தக்காளி, தயிர் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். பின் அரைத்த விழுது, உப்பு, தனியாத்தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின்னர் எலுமிச்சைச்சாறு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து குருமாவின் மேல் எண்ணெய் பிரிந்து வந்ததும்...