மிளகு-சீரக புலாவ்
தேவையானவை: பாஸ்மதி அரிசிஒரு கப், பட்டாணி - 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை தலா ஒன்று, பச்சைமிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, இஞ்சி -பூண்டு விழுது, தயிர், நெய் - தலா ஒரு டீஸ்பூன், புதினா ஒரு ஆர்க்கு , எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் அரிசியைக் கழுவி நீரை வடித்து வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும். பின்னர் சீரகம், மிளகு சேர்த்து லேசாக பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும், பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, தயிர், பட்டாணி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றவும். கலவையானது கொதித்து வரும்போது, அரிசியைச் சேர்த்து கிளறி விடவும். பின்னர் உப்பு, தழை சேர்த்து, குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கவும்.
புர்ஜி'
தேவையானவை: பாஸ்மதி அரிசி ஒரு கப், முட்டை 4, வெங்காயம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் - தலா ஒன்று, பச்சைமிளகாய், கிராம்பு தலா 2, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புதினா நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், பட்டை ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி நீரை வடிக்கவும். வாணலியில்
ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை or veg யை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, உதிர் உதிராக வருமாறு கிளறி இறக்கினால், 'எக் or veg புர்ஜி' ரெடி! குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், புதினா ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, அரிசியைச் சேர்த்து நன்றாக வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடவும். 3 விசில் வந்ததும் இறக்கி, குக்கரை திறந்து, எக் புர்ஜி, கொத்துமல்லித்தழை சேர்த்து, ஃபோர்க்கால் நன்றாக கிளறிவிட்டு இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக