தேவையானவை: உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ரஸ்க் தூள் ஒரு கப், கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 200 மில்லி, உப்பு
தேவையான அளவு உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறிய சைஸ் வட்டங்களாகத் தட்டி, பொடித்த ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து, நன்றாகக் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, விருப்பமான சாஸுடன் பரிமாறவும்.
உளுந்தம் பருப்பு சாதம்
தேவையானவை: பச்சரிசி(அ) புழுங்கலரிசி 1 கப், தோல் உளுந்தம்பருப்பு அரை கப், தேங்காய்த்துருவல் அரை கப், பூண்டு - 15 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் 5 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அரிசி, பருப்பை களைந்து போடவும். அதனுடன் மஞ்சள்தூள், சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து, மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து குக்கரைத் திறந்து தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இந்த சாதத்திற்கு எள்ளுத்துவையல், தேங்காய்த்துவையல், அப்பளம், வெங்காய வடகம் இவையனைத்துமே தொட்டுக்கொள்ள நல்ல பொருத்தம்.
கருத்துகள்
கருத்துரையிடுக