தேவையானவை: மைதாமாவு 200 கிராம் பைனாப்பிள் துண்டுகள். பொடித்த வெல்லம். கடலைப்பருப்பு 100 கிராம். நெய் - 100 மில்லி கேசரிப்பவுடர் 1 சிட்டிகை ஏலக்காய்த்தாள் சிறிதளவு
செய்முறை: மைதாமாவுடன் கேசரிப்பவுடர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும். பைனாப்பிள் துண்டுகளுடன் பொடித்த வெல்லம், வறுத்து ஊறவைத்து வேகவைத்த கடலைப்பருப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு, அரைத்த கலவையை கொட்டிக் கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதாமாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்டமாகத் தட்டி, அதனுள் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் வட்டமாகத் தட்டவும், இதை நெய் தடவிய தவாவில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு போளியாக சுட்டு எடுக்கவும்.
பிரெட் போளி
ரதேவையானவை : மைதாமாவு - 100 கிராம் பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல் தலா ! கட்ட பிரெட் - 10 துண்டுகள், நெய் 100 மில்லி, கேசரிப்பவுடர் - ! சிட்டிகை, ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் மைதாமாவுடன் கேசரிப்பவுடர், சிறிதளவுதண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும் பிரெட்டின் ஓரங்களை நீக்கி உதிர்த்துக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், பொடித்த வெல்லம் உதிர்த்த பிரெட் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் ஒரு கற்று சுற்றி எடுக்கவும். பின்னர் இதில் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் பிசைந்த மைதாமாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்டமாகத் தட்டி, உள்ளே பிரெட் பூரணத்தை வைத்து மூடவும் நெய் தடவிய தவாவில் வட்டமாகத் தட்டிய போளிகளைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் நெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும் .
கருத்துகள்
கருத்துரையிடுக