அரிசி - ஒரு கப், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பனீர்த் துருவல் - அரை கப், மிளகு, சீரகப்பொடி -ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்-4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தாளிக்க, கொத்துமல்லித்தழை சிறிதளவு, சோள மாவு, உப்பு, எண்ணெய் - அளவு. தேவையான
செய்முறை குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, புதினா சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறிக் கலவை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அரிசியை களைந்து சேர்ட்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, மூன்று விசில் வந்த தும் இறக்கவும்.
புரோக்கோலி கட்லெட்
தேவையானவை: நறுக்கிய புரோக்கோலி 2 கப், நறுக்கிய வெங்காயம், தக்காளி தலா அரை கப், உருளைக்கிழங்கு - 100 கிராம், உரித்த பூண்டு 4 பல், பச்சைமிளகாய் - 2, சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய சீஸ் - 2 டேபிள் ஸ்பூன், ரொட்டித்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய பூண்டு, தக்காளி, மசித்த உருளை சேர்த்து வதக்கவும். பின்னர் புரோக்கோலி துண்டுகள், உப்பு சேர்த்து லேசாக வதக்கி, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி, சீஸ் துருவலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியதும் வடை போல தட்டி, ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து, காய்ந்த தவாவில் போடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக