தேவையானவை: காய்ந்த மிளகாய் - 5, தனியா - 3 டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகம் தலா 2 டீஸ்பூன், ஓமம் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் 6, பூண்டு 15 பல், புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைக்கவும். அதில் உப்பை சேர்க்கவும். பூண்டு பற்களை உரித்து 10 பற்களை வைத்துவிட்டு மீதியை அரைத்துக் கொள்ளவும். மேலே சொன்ன பொருட்களில் எண்ணெய், உப்பைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து விழுதாக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், பூண்டை வதக்கவும். புளிக்கரைசலுடன் அரைத்த விழுதை கலந்து, வதக்கிய பூண்டுடன் சேர்க்கவும். நன்கு கொதித்து கலவை கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். இந்தக் குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால், ஜலதோஷம், உடல்வலி ஓடிப் போகும் .
5in 1 கீரைக்கூட்டு
தேவையானவை: பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை (அனைத்தும் ஆய்ந்து சுத்தம் செய்த கலவை) - ஒன்றரை கப், கொள்ளு 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப்பால் ஒரு கப், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் தலா 2, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு, பூண்டு - 10 பல் , நெய், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளை வறுத்து பொடிக்கவும். மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் ஆய்ந்த கீரைகள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடித்த கொள்ளை சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக