தேவையானவை: நறுக்கிய பீன்ஸ் ஒரு கப், துவரம் பருப்பு - கால் கப், கடலைப் பருப்பு - முக்கால் கப், காய்ந்த மிளகாய் 4, கறிவேப்பிலை, கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற
வைத்து வடித்து மிக்ஸியில் போடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவுக் கலவையை சிறிய வடைகளாக தட்டி, ஆவியில் வேக வைத்து தனியாக வைக்கவும். பீன்ஸையும் தனியாக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வேகவைத்த வடைகளை உதிர்த்து போட்டு வதக்கவும். பின்னர் வேகவைத்த பீன்ஸ், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பீன்ஸுக்கு பதிலாக கொத்தவரை (அ) வாழைப்பு (அ) முட்டைகோஸில் கூட இதே முறையில் உசிலி செய்யலாம்.
பருப்பு துவையல்
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப் தனியா 5 டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்தமிளகாய் - 6, வெல்லம், புவி, பெருங்காயம் - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையானவை
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், இஞ்சித்துருவல், புளி ஆகியவற்றைச் சேர்த்து சேர்த்து வறுக்கவும். இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு, உப்பு, வெல்லம் சேர்த்து துவையயாக அரைத்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக