தேவையானவை: மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 4, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, மஞ் சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தனியா ஒரு டேபிள்ஸ்பூன்,, சீரகம் - அரை டேபிள்ஸ்பூன் பட்டை - 1 பெரிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் 2, மிளகு - 6.
செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி வைத்துக் கொள்ளவும். அரைக்க
கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து, பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த பொடியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு மூடி வைத்து நன்கு வேகவிடவும்,
புளி இஞ்சி
தேவையானவைப: கெட்டியான புளிக் கரைசல் 1 கப், பச்சை மிளகாய் 10, இஞ்சித் துருவல் கப், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் - ½ கடுகு - 1 ஸ்பூன், வெல்லம் - நெல்லிக்காய் அளவு, மிளகாய் வற்றல் 2,மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி, எள் 2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: ப.மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று, சுற்றி எடுக்கவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் தாளிக்கவும். புளிக்கரைசல் சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், வெல்லம், ப.மிளகாய் விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக