தேலையானவை: வெந்தயம் அரிசி - தலா 100 கிராம் நெய் 100 மில்லி மிளகு - 10, பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன்பச்சை மிளகாய் - உப்பு - தேவையான அளவு.
செய்முறை :அரிசி, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து கொள்ளவும். இதனுடன் மிளகு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாவை சிறு கரண்டியில் எடுத்து நெய் தடவிய பணியாரக் கல்லில் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். மாவு அரைக்கும் போது சிறிதளவு தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம். சுவையும் வித்தியாசமாக இருக்கும். காரப் பணியாரம்
ஆரஞ்சு பணியாரம்
தேவையானவை: பொடியாக இட்லி
அரிசி - 200 கிராம், வெந்தயம் 1 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன், ஆரஞ்சுப்பழம் 1.நெய் 100 மில்லி.
செய்முறை: இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். தோல் உறித்து விதை நீக்கிய ஆரஞ்சுப்பழத்தை விழுதாக அரைத்து மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பணியாரக் கல்லில் நெய் தடவி, சிறிய கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும். ஆரஞ்சு பழத்திற்கு பதிலாக மற்ற பழங்களிலும் இதே முறையில் பணியாரம் சுடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக