கேசரி போளி
100 கிராம் ரவை சக்கரை-ஒன்றரை கப், - 130 மில்லி கோரிப்பவுடர் 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதாமாவுடன் கோரிப்டவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ரவையை நெய்யில் வறுத்து, ஒரு பங்கு ரவைக்கு இருபங்கு அளவு தண்ணீரை வாணலியில் ஊற்றி, வறுத்த ரவையைத் தூவி கிளறவும். இதனுடன் கேசரிப்பவுடர், சர்க்கரை, நெய் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும், பிசைந்த மைதாமாவை சிறிய சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நெய் தடவிய வாழை இலையில் இந்த உருண்டையை வைத்து, வட்டமாகத் தட்டி, ரெடியாக வைத்துள்ள கேசரியை இதனுள் சிறிது வைத்து மூடி, மறுபடியும் வட்டமாகத் தட்டவும். இந்த போளிகளை நெய் தடவிய தவாவில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்
சர்க்கரைவள்ளி கிழங்கு சுகியன்
தேவையானவை: மைதாமாவு - 100 கிராம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு 4. பொடித்த வெல்லம் 100 கிராம். எண்ணெய் - 250 மில்லி, ஏலக்காய்தூள் சிறிதளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதாமாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு உருண்டைகளையும் மாவில் தோய்த்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக