தேவையானவை:
இட்லி புழுங்கலரிசி, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - தலா 1 கப், தனியா - 1 டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
அரிசி-பருப்பு வடை
செய்முறை: அரிசி பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி, தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் நீரை வடித்து அதனுடன் தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக் கெட்டியாக அரைக்கவும். பின்னர் அதனுடன் கொக் மல்லித்தழை, பொடியாக நறுக்கிய வெற்சிைம் உப்பு சேர்த்து ஒரு சுற்று விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெயை காய விடவும். பிசைந்து வைத்துள்ள கலவையை மெல்லிய வடையாக தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும் மாவை அரைத்தவுடன் வடை செய்துவிடவும். அப்படி இல்லாவிட்டால் மாவு புளித்துவிடும்.
தேவையானவை:
பச்சரிசி, வேகவைத்த கடலைப்பருப்பு தலா 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 கப், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை தலா 10, நெய் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் 1 டேபிள் சிறிதளவு, வெல்லப்பாகு ஒரு கப். கெட்டியான தேங்காய்ப்பால் - கால் கப்.
செய்முறை: பச்சரி கழுவி 5 நிமிடங்கள் தண்ணீரில் வைத்து வடிக்கவும். பின்னர் அதை போட்டு சிறிதளவு தண்ணீர் விட ஒரு சுற்று விடவும். பின்னர் அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வேக விடவும். அரிசிக் கலவை நன்றாக வெந்ததும் வெல்லப்பாகை ஊற்றவும். வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயசத்துடன் கலந்து, வேகவைத்த கடலைப்பருப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக