ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...
கோதுமைரவை இட்லி
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், தயிர் - 700 கிராம்.
(கேரட்+பீன்ஸ் + உகிழங்கு + கோஸ் + முள்ளங்கி அனைத்தும் சேர்த்து 150 கிராம். மிகச் சன்னமாக கட்செய்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்), பமிளகாய் 5, இஞ்சி, பெ.வெங்காயம் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை. உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: ரவையுடன் தயிர், வேக வைத்த காய்கறிகள், பெ.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி இழை அனைத்தும் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி 20 நிமிடம் கழித்து இறக்கவும்.
அவல்இட்லி
தேவையானவை: புழுங்கல் அரிசி
ஒரு கப், பச்சரிசி. ஒரு ஒரு கப், கருப்பு உளுந்து - கால் கப், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, அவல், உளுந்தை கழுவி தனித்தனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும். வழக்கமான இட்லி மாவு பதத்திற்கு இதை அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து இடலி வார்க்கவும்.
ஒரு கப், பச்சரிசி. ஒரு ஒரு கப், கருப்பு உளுந்து - கால் கப், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: அரிசி, அவல், உளுந்தை கழுவி தனித்தனியாக 6 மணிநேரம் ஊறவைக்கவும். வழக்கமான இட்லி மாவு பதத்திற்கு இதை அரைத்து 12 மணிநேரம் புளிக்க வைத்து இடலி வார்க்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக