தேவையானவை:
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் 1 கப், காய்ந்த மிளகாய் - 1, பச்சைமிளகாய் 2, வெல்லம் - சிறிதளவு, புளிக்கரைசல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.
வேர்கடலை சட்னி
தேவையானவை வறுத்த வேர்க்கடலை 1 கப் நறுக்கியது. புனிக் கரைசல் - 1 டீல்பூன் மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன் எண்ணெய்:உப்பு - தேவையான அளவு
செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு அதில் வேர்க்கடலை, மிளகாய்த்தூள் .உப்பு.புளிக் கரைசல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் ஆறியதும் மையஅரைக்கவும் . பிறகு சட்னியில் கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும். வேர்கடலை சட்னி ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக