பயத்தம் பருப்பு சூப் : வாணலியில் நெய் விட்டு உருகியதும், பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி, பருப்பு தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விடவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி, இறக்கி பரிமாறவும்.
பாசிப்பருப்பு அல்வா
தேவையானவை: பாசிப்பருப்பு, பால் தலா ஒரு கப், நெய் - கால் கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பாதாம், முந்திரி - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை அரைமணி நேரம்
ஊற வைத்து களைந்து மிக்ஸியில் போடவும். தண்ணீர் விடாமல் பேஸ்ட் போல அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அதே நெய்யில் பாசிப்பருப்பு விழுதை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து நன்றாக கிளறி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக