வெஜிடபுள் ஃப்ங்கர்ஸ்
தேவையானவை: பயத்தம் பருப்பு - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், காலிஃப்ளவர் - அரை கப், கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, பெருங்காயம், சீரகம், சிட்ரிக் அமிலம், சர்க்கரை - தலா 1 டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக ஊறவைத்து அரைக்கவும். அதனுடன் கடலை மாவு, இஞ்சி-ப.மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைத்து நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம், சீரகம் போட்டு தாளித்து மாவுடன் சேர்க்கவும். பின்னர் சிட்ரிக் அமிலம், சர்க்கரை, சமையல் சோடா சேர்த்து நன்றாகக் கலந்து... ஆவியில் வேக வைத்து எடுத்தோ(அ) எண்ணெயில் பொரித்தோ, எண்ணெய் தடவிய தட்டில் பரப்பி.. நீளவாக்கில் விரல்நீள வில்லைகள் போட்டு கொத்துமல்லித் தழைத் தூவி பரிமாறவும்.
கேரட் பூரி
தேவையானவை: சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட், சர்க்கரை - தலா 200 கிராம், ரவை 300 கிராம், மைதா மாவு - 150 கிராம், பால் 50 மில்லி, முந்திரிப் பருப்பு - 5, நெய், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேரட் துண்டுகளைப் போட்டு அதனுடன் சிறிது பால், தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். கேரட் நன்றாக வெந்ததும் அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் ஊற வைத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். அகலமான பேசினில் மைதாமாவு, அரைத்த கேரட் விழுது, வறுத்த ரவை, மீதமுள்ள பால், சர்க்கரை சேர்த்து கலந்து மாவை அமுக்கிப் பிசைந்து... சிறுசிறு உருண்டைகளாக்கி, வட்டமாக இட்டு நன்கு காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக