புதினாச்சட்னி
&
கத்தரிக்காய்ச்சட்னி
தேவையானவை: புதினா - ஒரு கட்டு(பொடியாக அரியவும்) இங்காயம்-1(நறுக்கியது), பூண்டு விழுது - அரை டீஸ்பூன், இனி வுழுது - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, துருவிய தேங்காய் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், களுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம் உளுத்தம்பருப்பு தாளித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின் புதினா போட்டு வதக்கி, துருவிய தேங்காயையும் போட்டு கிளறி இறக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மைய அரைக்கவும். புதினாச்சட்னி ரெடி
கத்தரிக்காய்ச்சட்னி
தேவையானவை:
கத்தரிக்காய் - 1, வெங்காயம்
பெரிய 1(நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4, புளி விழுது - 3 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 4, கொத்துமல்லித் தழை - சிறிய கட்டு, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கொண்டைக் கடலை - 1 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்,
செய்முறை: கத்தரிக்காயைக் கழுவி துடைத்துவிட்டு, அதன் மேல் லேசாக எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும். ஆறியதும் சுட்ட கத்தரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, புளிக்கரைசல், சீரகம் பூண்டு சேர்த்து மசித்துக்கொள்ளவும் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைப் போட்டு தாளிக்கவும். இதில் மசித்து வைத்திருக்கும் கலவையைப் போட்டு வதக்கி, தேவையான உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கொண்டைக் கடலை, வெந்தயம், காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளிக்கவும். ரெடி செய்து வைத்திருக்கும் சட்னி மேல் தாளித்த கலவையைக் கொட்டி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக